டெல்லி – இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு

Home

shadow

 

        இந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2014-இல் இருந்து 2016 வரையில் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஜி அகிர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய குற்ற ஆவண மையத்தின் அறிக்கையின்படி, 2016-இல் சைபர் மோசடி தொடர்பாக 2 ஆயிரத்து 522  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே 2015-ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 384 ஆகவும், 2014-ஆம் ஆண்டு ஆயிரத்து 286 ஆகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பான தகவல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :