டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தற்காப்பு பயிற்சியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

Home

shadow

 

தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த நான்கு வருடங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவு, டெல்லியில் தற்காப்பு பயிற்சி முகாம் நடத்திவருகிறது. இந்த ஆண்டு, டெல்லியில் ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடந்து வருகின்றன. கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் சுமார் 2 ஆயிரத்து 400 பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்குபெற்றனர். இவர்களுக்கு பெண்களுக்கான சிறப்பு காவல் பிரிவு காவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் அனைவரும் ஆர்வமாக தற்காப்பு பயிற்சியை கற்று வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :