தமிழகம் உள்ளிட்ட 8 மாநில உயர்நீதிமன்றங்கள் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றம் தகவல்

Home

shadow

சிறைகளில் கைதிகள் மரணம் அடைவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ஆயிரத்து 382 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு மனிதாபிமானமற்ற வகையில் கைதிகள் நடத்தப்படுவதே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இதனை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், சிறைகளில் கைதிகள் மரணம் அடைவது தொடர்பாக உயர்நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தலாம் என்றும் இயற்கைக்கு மாறான இறப்பு என்றால் உரிய இழப்பீட்டை நிர்ணயம் செய்து உத்தரவிடலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா அமர்வின் முன் நேற்று நடைபெற்றது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், சிறைக் கைதிகள் மரணம் தொடர்பாக 16 உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். சென்னை, கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட 8 மாநில உயர்நீதிமன்றங்கள் இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விரைவாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :