பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது

Home

shadow


கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாரதிய ஜனதா நெருங்கி வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள்  இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாறாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெறும் வகையில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா 116 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட பதாமி தொகுதியில் 300 வாக்குகள் வித்தியாசத்திலும், சாமுண்டீஸ்வரி தொகுதியில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேசமயம் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்டி தேவகவுடா கட்சி மைசூரு மண்டலத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். குமாரசாமி, தான் போட்டியிட்ட ராமநகரா, சென்னபட்னா ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். பாரதிய ஜனதா தற்போது 116 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனால் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதனை கொண்டாடி வருகின்றனர். கடந்த 2007-இல் பாரதிய ஜனதா வெற்றி பெற்றபோது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். தற்போது அக்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பா, நாளை மறுதினம் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :