பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் பாஜக எம்.பி.க்களுக்கு நன்னடத்தை பயிற்சி முகாம் புதுடெல்லியில் தொடங்கியது

Home

shadow

பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் சார்பில் இரண்டு நாள் நன்னடத்தை பயிற்சி முகாம் பிரதமர் மோடி தலைமையில்  புதுடெல்லியில் இன்று தொடங்கியது

பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைகளில் நன்னடத்தை பின்பற்றுவது குறித்த அபியாஸ் வர்கா என்ற நன்னடத்தை வகுப்புகள் கடந்த 2014 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் உள்ள அக்கட்சியின் உறுப்பினர்கள் நன்னடத்தையுடன் செயல்படுவது குறித்தும் கட்சியின் கொள்கை குறித்தும் இந்த கூட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்நிலையில்  மத்தியில் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து அக்கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நன்னடத்தை வகுப்புகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று  தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி நட்டா மற்றும்

 

பிராக்யா சிங் தாகூர் ,அனுராக் தாகூர் , கிரிராஜ் சிங், கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :