பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மின்னல் தாக்கி 51 பேர் உயிரிழப்பு

Home

shadow

                     பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கனமழை காரணமாக மின்னல் தாக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.


பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.  சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  நகரங்களில் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இந்த நிலையில், பீகாரில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என பீகார் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பீகார் அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும்.  காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும்.  ஜார்க்கண்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  இரு மாநிலங்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக  உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :