புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்- 32 இஸ்லாமியப் பெண்கள்

Home

shadow

 

           இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஹஜ் பயணம் முக்கிய இடம் வகிக்கிறது.  இதில் கணவர் அல்லது ஆண் பாதுகாவலர்களுடன் செல்லும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தனியாக புனித ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்க கோரி நிகழாண்டில் ஆயிரத்து 300 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கு கடந்த 31-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி வானொலி உரையின்போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்றும் கூறியிருந்தார். அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட 32 பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் துணையின்றி புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இவர்களில் 12 பேர் லக்னோ மற்றும் 12 பேர் கான்பூரைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் அமேதி மற்றும் கோண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள். புனித ஹஜ் தனிப்பயணத்திற்கு அனுமதி  அளித்த மத்திய அரசிற்கு 32 பெண்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பான செய்திகள் :