பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு

Home

shadow

                    பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் சென்ற மோடியை, பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து அந்நாட்டு பிரதமர் லோட்டேய் செரிங் நேரில் வந்து வரவேற்றார்.

பின்னர் ராணுவ அணிவ குப்பு மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் மன்னர் ஜிக்மே கேசார் நம்கயால் மற்றும் மக்களைச் சந்திக்கும் மோடி அந்நாட்டுப் பிரதமருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். பூடான அரச பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மோடி உரையாற்றுகிறார். பூட்டான் தலைநகர் திம்பூவில் இஸ்ரோ அமைத்த விஞ்ஞான மையம் உள்ளிட்ட ஐந்து முக்கியத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :