மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு - டிஜிட்டல் வடிவில் உள்ள, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு

Home

shadow


      டிஜிட்டல் வடிவில் உள்ள, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களை ஏற்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

     பொதுமக்களின் வசதிக்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முக்கிய ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு டிஜி லாக்கரில் வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 'டிஜிலாக்கர்' மற்றும் 'எம்பரிவாஹன் செயலிகள் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களைச் சரிபார்க்கும் போக்குவரத்து போலீசார், டிஜிட்டல் வடிவில் உள்ள ஆவணங்களை ஏற்க மறுப்பதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் ஆப்களில், டிஜிட்டல் வடிவில் காண்பிக்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஆவணங்களை ஏற்கும்படி, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்த சான்றிதழ்களை, மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக கருத வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :