முத்தலாக் முறையில் விவகாரத்து செய்த ஓமன் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு கடிதம்

Home

shadow

முத்தலாக் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான சட்ட மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஓமன் நாட்டை சேர்ந்த சைத் ஜஹ்ராப் என்பவர், ஐதராபாத்தை சேர்ந்த கவுசியா பேகம் என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருணம் செய்து கொண்டார். சில நாட்கள் இங்கு தங்கியிருந்த சைத் ஜஹ்ராப் பின்னர் ஓமன் சென்றுவிட்டார். இருப்பினும் சைத் ஜஹ்ராப் அங்கிருந்து கவுசியாவின் செலவுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கவுசியாவை தொடர்பு கொண்ட சைத் ஜஹ்ராப், முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு கடிதம் எழுதியுள்ள கவுசியா, ஓமனில் உள்ள தனது கணவரிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :