முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் இடம்பெயர்ந்ததாக தகவல்

Home

shadow

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பெனாசிர் புட்டோ கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி அருகே தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.  சம்பவத்தின் 10-ம் ஆண்டு நிறைவடையும் நிலையில் இந்த கொலை குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதியாக, அப்போதைய அதிபர் பர்வேஷ் முசரப், பெனாசிர் புட்டோ, ஜமியத் உலமா ஏ இஸ்லாம் கட்சித் தலைவர் பஸ்லுர் ரஹ்மான் உள்ளிட்டோரை  கொலை செய்ய ஒசாமா பின்லேடன் திட்டமிட்டுள்ளதாக ஐ,.எஸ்.ஐ.உளவு அமைப்பு பாகிஸ்தான் உள்துறைக்கு கடிதம் எழுதியதாக நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த கடிதத்தில், பெனாசிர் கொலை திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே, பின்லேடன் ஆப்கானிஸ்தானுக்கு இடம் மாறியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.உளவு அமைப்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாததே பெனாசிர் புட்டோ படுகொலைக்கு காரணமாக அமைந்து விட்டதாகவும் நாளேடுகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :