மும்பை பங்குச் சந்தை, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது

Home

shadow


       மும்பை பங்குச் சந்தை, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் சுமார் 700 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாய் 15 பைசாவாகச் சரிவடைந்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் மிகப் பெரிய அளவில்  பங்குகள் விற்கப்பட்டதன் எதிரொலியாக, ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, கடந்த சில நாட்களாக சரிவையும், உயர்வையும் மாற்றி மாற்றி சந்தித்துவந்த இந்தியப் பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மிகப பெரிய வீழ்ச்சியைக் கண்டது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் சுமார் 700 புள்ளிகளை  இழந்த்து. இதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் இன்று தொடக்கத்தில் 300 புள்ளிகள் சரிந்த வர்த்தக முடிவில் 230 புள்ளிகள் சரிந்த்து. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 74 ரூபாய் 15 பைசாவாக குறைந்தது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் வசமிருந்த பங்குகளையும், கடன்பத்திரங்களையும் அதிக அளவில் விற்பனை செய்ததே பங்குகளின் விலை வீழ்ச்சிக்கும், ரூபாய் மதிப்பின் சரிவுக்கும் முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :