யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு

Home

shadow



நிதிநெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை கடந்த 5-ந் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் நிறுவனர் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மத்திய அரசு யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்தை கடந்த 13-ந் தேதி அறிவித்தது. அதன்படி, அந்த வங்கியில் உள்ள தனது பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி 3 ஆண்டுகளுக்கு 26 சதவீதத்துக்கு கீழ் குறைக்கக் கூடாது என்றும், மற்ற முதலீட்டாளர்கள், தற்போதுள்ள பங்குதாரர்களின் 75 சதவீத பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முடக்கிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் தலைமையிலான புதிய நிர்வாகம் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்கும் என்றும், வருகிற 18-ந் தேதி யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 




இது தொடர்பான செய்திகள் :