லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பு

Home

shadow

                                  லோக்பால் தலைவராக நியமனம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.

அரசியல்வாதிகள் மற்றும் உயர் மட்ட அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக்பால் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷை, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த 17-ஆம் தேதி தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், லோக்பாலின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குகுடியரசுத் தலைவர்ராம்நாத்கோவிந்த்பதவிப்பிரமாணம்செய்துவைத்தார். குடியரசு துணைத் தலைவர்வெங்கய்யநாயுடு, பிரதமர்ரமோடி, உச்சநீதிமன்றதலைமைநீதிபதிரஞ்சன்கோகோய்ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :