2 லட்சம் பேர் கொண்ட சைபர் சேனா எனும் இணைய படை

Home

shadow

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுமார் 2 லட்சம் பேர் கொண்ட சைபர் சேனா எனும் இணைய படையை உருவாக்க உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

 

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டோடு நிறைவடைய உள்ளது. இதனையடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக அக்கட்சியினர் தற்போதே ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், தேர்தல் பிரச்சார பணிகளுக்காக சுமார் 2 லட்சம் பேர் கொண்ட பயிற்சி பெற்ற இணைய படையை உருவாக்க அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா  துணை செயலாளர் ரத்தோர், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பயிற்சி பெற்ற இணையப்படையை உருவாக்க உள்ளதாகவும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு இணைய வீரர் இருப்பார் எனவும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் பெரும்பான்மையான மக்களிடம் தங்கள் கருத்துக்களை கொண்டு சேர்க்க முடியும் எனவும், அடுத்த 3 மாதங்களுக்குள்ளாக இந்த இணையப்படை தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :