2019 – 2020ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5-ல் நிர்மலா தாக்கல் செய்கிறார்

Home

shadow

            2019 – 2020ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்  ஜூலை 5-ல் நிர்மலா தாக்கல் செய்கிறார்

        மோடி தலைமையிலான புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய பட்ஜெட் வரும் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றார்.

        மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் , 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

        முன்னதாக ஜூன்17 அன்று தொடங்கும் மக்களவை, ஜூலை 26 வரை நடைபெற இருக்கிறது. ஜூன் 20 அன்று குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.

        தொடர்ந்து ஜூலை 4 அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

        வளர்ச்சி விகிதத்தில் சீனாவை விட இந்தியா பின்தங்கியுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :