அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்லில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை - முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்

Home

shadow

 

     அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்லில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோத்தக் சென்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில், டெல்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாகவும், மக்கள் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  மேலும், நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது எனவும், அரியானா சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத்  தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :