அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை - நெருக்கடிக்கு ஆளான விமான சேவை நிறுவனங்கள் - கலால் வரியை குறைத்த மத்திய அரசு

Home

shadow

                      விமான எரிபொருள் மீதான கலால் வரியை 11 சதவீதமாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


8 சதவீதமாக இருந்த விமான எரிபொருள் மீதான கலால் வரியை 14 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  


தொடர்ந்து அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விமான சேவை நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகின. 


இந்நிலையில் விமான எரிபொருள் மீதான கலால் வரியை 3 சதவீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், விமான எரிபொருள் மீதான கலால் வரியை 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் விமான சேவை நிறுவனங்கள்  சற்று நிம்மதி அடைந்துள்ளன.


முன்னதாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :