அதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை தொடர்ந்து, அதிமுக கட்சி 20 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது

Home

shadow

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை தொடர்ந்து, அதிமுக கட்சி 20 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மகா கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்த அதிமுக, பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைத்தது. இதில் பாமக 7 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி  5 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் களம் இறங்கவுள்ளன. புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளன. இதில், புதிய நீதிக் கட்சி மட்டும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது. சின்னத்தின் அடிப்படையில், அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். முன்னதாக நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :