அனைத்து மொழிகளிலும் தபால்துறை தேர்வு – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Home

shadow

               அனைத்து மொழிகளிலும் தபால்துறை தேர்வு – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

                தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளில் தபால்துறை தேர்வுகள், நடத்தப்படுமென அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி நாடு முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுக்கு மூன்று நாள்கள் முன்பு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ் மொழி மூலம் தேர்வு எழுதும் வாய்ப்பு திடிரென நீக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தது.

இந்த நிலையில், தபால்துறை தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள், அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நான்கு முறை முடங்கியது.

இதனையடுத்து, தமிழக எம்.பி.க்கள் கேள்விக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார். அப்போது, கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூறினார்.

மேலும், தபால்துறை தேர்வுகள், தமிழ் மட்டுமல்லாது அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படுமென அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழக எம்.பி.க்கள் மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :