அப்பாச்சே ஹெலிகாப்டர் விற்பனை

Home

shadow


 

இந்தியாவிற்கு 6 அதிநவீன அப்பாச்சே போர் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்திய விமானப்படைக்கு அதிநவீன ஆயுத வசதிகளுடன், இரவு நேரத்திலும் சென்று தாக்கும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் போயிங் ஏ.ஹெச். 64 இ அப்பாச்சே போர் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. இதற்காக நான்காயிரத்து 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த நிலையில் 6 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க இந்திய நட்புறவு வலுப்படவும், தெற்காசியப் பகுதியில் அமைதி நிலவ முக்கிய பங்கு வகிக்கும் நாடாகிய இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த ஹெலிகாப்டர்களை  விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :