அமித்ஷா - காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

Home

shadow


     தலித்துகளை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் மரபு என பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமித் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்துகள் தாக்கப்படுவதாகவும், ஒடுக்கப்படுவதாகவும் தெரிவித்த ராகுல் காந்திக்கு அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். பீமாராவ் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன் ராம், சீதாராம் கேசரி ஆகிய தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பது குறித்து ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  மேலும், பல ஆண்டுகளாக தலித்துகளின் விருப்பங்களை காங்கிரஸ் அவமதித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :