அமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு

Home

shadow

             அமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு

             அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

             அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு அளித்து வந்த வரி விலக்கிற்கான அந்தஸ்த்தை ரத்து செய்தது. இதனையடுத்து இந்தியாவும் அமெரிக்காவின் 28 பொருள்களுக்கு சுங்கவரியை உயர்த்தியது. இதனால் இந்தியா  - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் வரி தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க பொருள்களுக்கு தொடர்ந்து கூடுதல் வரி விதிக்கும் நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது என குற்றம் சாட்டினார். மேலும், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா விதித்து வரும் வரியை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :