அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு முயற்சி நடக்கிறது - பிரியங்கா காந்தி

Home

shadow

அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு முயற்சி நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் உத்திர பிரதேஷ கிழக்கு பகுதி செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம், சில்சாரில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்பியுமான சுஷ்மிதா தேவ்-ஐ ஆதரித்து அக்கட்சியின் உத்திர பிரதேஷ கிழக்கு பகுதி செயலாளர் பிரியங்கா  பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது எனவும், ஆனால், அரசியலமைப்பு சட்டத்துக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படாமல் இருப்பதை நாம் கண்கூடாக  காணலாம் என தெரிவித்தார். மேலும்  அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின்  தேர்தல் அறிக்கையில், பல்வேறு கலாசாரங்கள், மதங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார்  ஆனால், தமது சொந்த வாராணசி மக்களவைத் தொகுதியில், ஒரு வீட்டுக்கு கூட சென்று, அவர்களது நிலை என்னவென்று அவர் கேட்டறியவில்லை என பிரயங்கா காந்தி குற்றம் சாட்டினார்

இது தொடர்பான செய்திகள் :