அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல - வெங்கையா நாயுடு

Home

shadow

 

அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


இந்தியாவில் தேர்தல் சமயத்தில் இலவச திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது வழக்கமாக உள்ளது. இந்த இலவசங்களால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு எற்படுவதாக பல சமூக ஆர்வலர்கள் இதை எதிர்த்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன என்றும் அது சாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை எனவும் விமர்சித்தார். மேலும் நாளை, அவர்களால், அதனை நிறைவேற்ற முடியாவிட்டால், யார் அதற்கு பொறுப்பு என்றும் கேள்ளி எழுப்பினார். மாநிலத்தின் கடன், வரி வருவாய், தேவைப்படும் நிதி குறித்து முதலில் அரசியல் கட்சிகள் ஆலோசிக்க வேண்டும் எனவும் அதனை எப்படி நிறைவேற்ற போகிறோம் என்பதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் கூறினார். இது தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :