அரபிக் கடலில் உருவானது வாயு புயல்!

Home

shadow

         அரபிக் கடலில் உருவானது வாயு புயல்!

        குஜராத் போர்பந்தல் இடையே கரையை கடக்கிறது
 
        அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், வரும் 13ஆம் தேதி காலை குஜராத் போர்பந்தர் – மஹூவா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு வாயு புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

      இன்றைய காலை நிலவரப்படி வாயு புயல், மும்பைக்கு தெற்கு – தென்மேற்கு திசையில் 540 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

      இந்த புயல், அதி தீவிர புயலாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து, வரும் 13ம் தேதி காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மஹூவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :