அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் - ராகுல் காந்தி

Home

shadow

                    காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரேக்கட்டமாக அடுத்த மாதம் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்அருணாசலப் பிரதேசத்தின் தலைநகர் இடாநகரில் பொதுக் கூட்டத்தில் கலந்து  கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சாலைவசதி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சமாளிப்பதற்காக சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தேவைப்படும் எனவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது எனக் கூறிய ராகுல் காந்தி, வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படாது என்றும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :