அருண்ஜெட்லியை சந்திக்க பிரதமர் மோடி மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல்

Home

shadow

                          டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்  சிங், ஸ்மிருதி ராணி, ஜிஜேந்திர சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜேட்லியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதையடுத்து தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :