அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு வீடியோ  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Home

shadow

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தினால் காஷ்மீர் விடுதலை அடையும் என்று அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு வீடியோ  வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் சார்பில் நேற்றிரவு ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த அமைப்பின் 2-ம் நிலைத் தளபதியான ஒசாமா மெக்மூத் பேசியுள்ளார். ஏற்கனவே காஷ்மீரில் 6 லட்சம் வீரர்களை இந்தியா நிலைநிறுத்தி உள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தினால், காஷ்மீர் மீதான பிடியை இந்தியா தளர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு காஷ்மீர் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். இந்திய துணைக் கண்டத்தில் ஜிகாத் அமைப்புகள் வலுப்பெற வேண்டும் என்றும் அனைத்து முஸ்லீம்களும் காஷ்மீர் மக்களுக்கு துணை  நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது போன்ற தாக்குதல்களால்தான் அமெரிக்காவும் உள்நாட்டு பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவமும் இந்து அரசாங்கமும் அமைதி இழக்கும் வகையில் அந்த பகுதியை போர் மண்டலமாக மாற்ற வேண்டும் என்றும் ஒசாமா மெக்மூத் வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்த வீடியோ பதிவு எச்சரிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :