ஆதார் இல்லாமல் மருத்துவம் செய்ய மறுப்பு

Home

shadow

ஹரியாணா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பவன்குமார் என்பவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தனது தாயாரை நேற்று அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆபத்தான் நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு, ஆதார் அட்டை இருந்தால்தான் சிகிச்சை தொடங்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த பெண்மணி உயிரிழந்தார். கார்கில் போரில் நாட்டுக்காக உயிர் நீத்த வீரரின் மனைவியான அந்த பெண்மணிக்கு, ஆதாரை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழப்பு ஏற்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :