ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு

Home

shadow

                     ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நதி யில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குண்டூர், கிருஷ்ணா மாவட்டங் களில் 87 கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கிருஷ்ணா மற்றும் குண் டூர் மாவட்டங்களில் 87 கிராமங் களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் 24 கிராமங்கள் வெள்ளத் தில் தத்தளித்து வருகின்றன.  இதில் கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேற்றப்பட்டு, 56 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரகாசம் அணையில் 7 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதில் சுமார் 370 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளதால் ஏராளமான கிரா மங்கள் இருளில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் ஏரிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் மத்திய பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :