ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்தது

Home

shadow


ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் சந்தைக்கு, அப்பகுதியை சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் படகில் சென்று விட்டு, மீண்டும் கிராமத்துக்கு திரும்பியுள்ளனர். அப்போது, திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மேல்பகுதியில் இருந்தவர்கள் 11 பேர் மட்டும் நீந்தியபடி கரைக்கு திரும்பியுள்ளனர். கோதாவரி ஆறு 400 மீட்டர் அகலம் மற்றும் 150 அடி ஆழம் உடையதால், பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் விஜயவாடா, விசாகபட்டணம், காக்கிநாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேசியப் பேரிடர் , மாநில பேரிடர் மீட்பு படையினர் 3 குழுக்களாக 22 படகுகளில் தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில்படகில் 25 க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் 11 பேர் மட்டும் பத்திரமாக கரைக்கு வந்துள்ளனர் எனவு, 15 க்கும் மேற்பட்டவர்கள் குறித்து தகவல்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியப் பேரிடர் மீட்பு படையினர் செற்கைக்கோள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :