ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நேரம் முடிந்தது: காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது

Home

shadow

 

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. மூன்று மணி நிலவரப்படி 58 சதவிகித வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்த நிலையில், வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

டோக்கன் வாங்கியவர்கள் எவ்வளவு நேரம் ஆனாலும், ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில் எந்திரங்களை சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :