இந்திய பங்கு சந்தைகள் உயர்வு

Home

shadow


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் இந்திய பங்கு சந்தைகள் உயர்வை கண்டுள்ளன.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முன்னேற்றம் அடைந்ததால், பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 35 ஆயிரத்து 928 புள்ளிகளை எட்டியது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 112 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 919 புள்ளிகளைத் தொட்டது. வங்கித் துறைப் பங்குகளின் விலை 1.80 சதவீதமும், ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை 1.66 சதவீதமும், மின்சார நிறுவனப் பங்குகளின் விலை 1.63 சதவீதமும் அதிகரித்துள்ளன. தனிப்பட்ட நிறுவனங்களைப் பொருத்தவரை, டாடா ஸ்டீல், பவர் கார்ட் மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் விலை உயர்வைக் கண்டன.  

இது தொடர்பான செய்திகள் :