இந்திய வானிலை ஆய்வு மையம்

Home

shadow

கடும் பனிப்பொழிவார் வட மாநிலங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து குளிர் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

          தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக அதிகாலையில் அதிக அளவு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இமாசலப்பிரதேசத்தில் பெய்துள்ள புதிய பனிப்பொழிவால்,  குளிர் அலை மிகவும் அடர்த்தியாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

          இதனால், வட மாநிலங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து குளிர் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி உள்ளிட்ட வட மாநில மக்கள், இந்திய வானிலை மையத்தின் தற்போதைய தகவலால் கலக்கமடைந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :