இந்தியா வந்துள்ள தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு

Home

shadow

      இந்தியா வந்துள்ள தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னுக்கு குடியரசுத்  தலைவர் மாளிகையில் இன்று காலை பாரம்பரிய முறைப்படி சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முன் தினம் டெல்லி வந்தடைந்த அவர் அங்குள்ள அக்ஷர்தம் கோவிலை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடியுடன் நொய்டாவுக்கு மெட்ரோ ரயிலில் மூன் ஜே இன் பயணம் மேற்கொண்டார். நொய்டா தொழிற்பேட்டையில் சாம்சங் நிறுவனம் அமைத்துள்ள உலகின் மிகப் பெரிய செல்போன் தயாரிப்புத் தொழிற்சாலையை, இருவரும் இணைந்து தொடங்கிவைத்தனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து தென் கொரிய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் மூன் ஜே இன் நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :