இந்தியா – இந்தோனேசியா உறவை சிறப்பிக்கும் வகையில் ராமாயண தபால் தலையை வெளியிட்டது இந்தோனோஷியா

Home

shadow

இந்தியா – இந்தோனேசியா தூதரக உறவின் 70-அது ஆண்டை முன்னிட்டு இரு நாட்டு உறவை சிறப்பிக்கும் வகையில் ராமாயண தபால் தலையை வெளியிட்டது இந்தோனோஷியா.


இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டது. இதன் 70-ம் ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட இந்தோனேஷிய அரசு முடிவு செய்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்தோனேஷியா சென்றிருந்த போது இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமாயணத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை சித்திரிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையை அந்நாட்டு அரசு நேற்று வெளியிட்டுள்ளது. தபால் தலை வெளியீட்டு விழாவில் இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், இந்தோனேஷிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்தூர்ரஹ்மான் முகமது பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இது தொடர்பான செய்திகள் :