இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்

Home

shadow

                         இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அச்சத்துடன் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்யது. இதனை அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்தியாவின் செயலில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை உலக நாடுகள் தட்டிக்கழித்துவிட்டனர். இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது என்ற  கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், தேவைப்பட்டால் இக்கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.  இதனால் மிகுந்த அதிச்சத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இந்தியாவில் உள்ள அணு ஆயுதக் குவியல்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து உலக நாடுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என டுவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :