இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள 7 வயது சிறுமி

Home

shadow

             இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள 7 வயது சிறுமி 
            ஐநா பொதுக்கூட்டத்தில் மணிப்பூரை சேர்ந்த 7 - வயது சிறுமி லிசிப்ரியா கஞ்சுஜம் உரையாற்றப்போகிறார். வருகிற மே 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தில்  பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதில் 140 நாடுகளை சேர்ந்த 3000 ஐநா பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், மணிப்பூரை சேர்ந்த 7 - வயது சிறுமி லிசிப்ரியா கஞ்சுஜம், இந்திய நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞருக்கான பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை குறித்த ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :