இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதித்திட்டம்

Home

shadow

                  இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்  பயங்கரவாதிகள் சதித்திட்டம் 

                  புத்த பூர்ணிமா தினத்தன்று இந்தியா மற்றும் பங்களாதேஷில் ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. 

                   உலகின் பல்வேறு நாடுகளாலும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த மாதம் 21ம் தேதி இலங்கையில் நிகழ்த்திய கொடூர தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐஎஸ் தீவிரவாத அமைபின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்த நிலையில், நியூசிலாந்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நோக்குடனே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது என தீவிரவாத அமைப்பு தெரிவித்திருந்தது.

                   இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் மேற்குவங்கம் அல்லது பங்களாதேஷில் ஜமாத் -உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் அல்லது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்குவங்கம் மற்றும் பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :