இந்தியாவை அச்சுறுத்த சீனா செய்து வரும் செயல்

Home

shadow

         இந்திய எதிர்ப்பு நிலையில் இருந்து வரும் சீனா, பாகிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தையொட்டி உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் 350 பதுங்கு குழிகளை பாகிஸ்தான் ராணுவத்திற்காக சீனா அமைத்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், விமானதளங்களை சீரமைத்தல் உள்ளிட்ட ராணுவ உள்கட்டமைப்புகளிலும் பாகிஸ்தானுக்கு சீனா உதவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

         பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சீன வீரர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய-அமெரிக்க நட்புறவு வலுவடைந்து வருவதால்  பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து எல்லைப் பகுதியை பதற்ற சூழலில் வைத்திருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கருதப்படுகிறது. இதனிடையே, ராஜஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் ராணுவ சீருடை மற்றும் அணிகலன்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பதால், பஞ்சாப்பை போன்று ராஜஸ்தானிலும் ராணுவ சீருடை விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :