இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக ஜெயராம் தாக்கூர் இன்று பதவியேற்க உள்ளார்

Home

shadow

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றுது. தேர்தலில் பதிவான வாக்குகள் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாரதிய ஜனதா 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் பாரதிய ஜனதா சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம்குமார் துமல் தோல்வியைடைந்தார். இதனால் இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இமாச்சல பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தின் 13வது முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். சிம்லா நகரில் உள்ள ரிட்ஜே திடலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :