இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெயராம் தாக்கூர் தேர்வு

Home

shadow

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றுது. தேர்தலில் பதிவான வாக்குகள் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாரதிய ஜனதா 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் பாரதிய ஜனதா சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம்குமார் துமல் தோல்வியைடைந்தார். இதனால் இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து இமாச்சல பிரதேச பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சராக 5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இமாச்சல பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ராம் தாக்கூரும் இணைந்து ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரி கடிதம் கொடுத்தனர். இதைதொடர்ந்து வரும் 27ஆம் தேதி ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் பல மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :