இரு நாட்டு எல்லை பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

Home

shadow

                                     ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இரு நாட்டு எல்லை பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட்த்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று அதிகாலை 5.30மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. காலை 7மணி வரை நடைபெற்ற இந்த சண்டையில் எந்த பாதிப்பும் இந்திய தரப்பில் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் பால்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம்  பலமுறை இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :