இவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் : சந்திரபாபு நாயுடு

Home

shadow

                                                          மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை திருடியவரை, தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11-ஆம் தேதி ஆந்திராவில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் போது ஏராளமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்மேலும் சனிக்கிழமை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்ற அவர், இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடத்த முடியும் என்பதை நிரூபிக்க தன்னுடன் வந்துள்ள நிபுணர்குழுவை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அறிய மாலை 4 மணிக்கு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் நிபுணர்கள் குழுவில் உள்ளவர்களின் பெயர்களை, தேர்தல் ஆணையத்தில் ஆந்திரமாநில அரசின் டெல்லி பிரதிநிதி சமர்ப்பித்தார். அதனை ஆய்வு செய்த போது. கடந்த 2010-ம் ஆண்டு இவிஎம் இயந்திரங்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஹரிபிரசாத் என்பவரின் பெயரும்நி புணர்களின் குழுவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அதன்பின் நிபுணர்கள் குழுவில் ஹரிபிரசாத் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், உடனடியாக அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.இது குறித்துதெலுங்கு தேசம் சட்டப் பிரிவுத்தலைவருக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பி கடிதத்தில், ஹரிபிரசாத் போன்ற நபர்களுடன் ஆலோசனை நடத்துவது சரியானதாக இருக்காது என்றும், இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்படாதவர்கள் வேறுயாருடனும் இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :