உச்சநீதிமன்றம் – உத்தரவு

Home

shadow


நாட்டில், மருத்துவ மனைகளுக்கு உள்ளேயே, மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தொடரப்பட்ட, பொது நல வழக்கில், மத்திய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மனைகள் அமைந்துள்ள வளாகத்திலேயே பெரும்பாலும் மருந்துக்கடைகள் அமைந்துள்ளன. இதனால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அதிகப்படியான செலவில் மருந்துகளை வாங்க அழுத்தம் கொடுப்பதும், அந்த மருந்துகளை குறிப்பிட்ட மருந்து கடையிலேயே வாங்க நிர்ப்பந்திப்பதும் வாடிக்கையாக உள்ளது. உலகில் அதிகமான விற்பனை லாபம் தரும் வணிக நடவடிக்கைகளில் பெருமளவிலான பணம் மருந்துத்துறையில் ஈட்டப்படுகிறது. இந்நிலையில், , மருத்துவ மனைகளுக்கு உளளேயே மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாக தொடரப்பட்டபொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :