உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்படும் - யோகி ஆதித்யநாத்

Home

shadow

                   உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தின் பெயர், இனி அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சென்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராம் கதா பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இங்கு வந்துள்ள தென் கொரிய அதிபரின் மனைவியை வரவேற்பதாகவும், தென் கொரியாவுடன் 2 ஆயிரம் பழமை வாய்ந்த கலாசார தொடர்பை இந்தியா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நமது பெருமை மற்றும் பாரம்பரியத்தின் குறியீடாக அயோத்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்னர் அயோத்தி பெயரை சொல்லவே மக்கள் பயந்ததாகவும், கடந்த காலங்களில் எந்த முதலமைச்சரும் அயோத்திக்கு வந்தது இல்லை எனவும் தெரிவிதார். அயோத்தி நகரம், நமது கௌரவம், பெருமையின் சின்னமாக விளங்குவதாகவும், ராமபிரான் என்றவுடன், எல்லாருக்கும் அயோத்தி நினைவுக்கு வரும் என்பதால் அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டம் இனி  அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :