உத்திரகாண்டில் தொடர் கனமழை - கங்கையில் வெள்ளப் பெருக்கு அபாயம்
உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பெய்துவரும் கனமழை காரணாக கங்கையில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிறுப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து, ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஹரித்துவாரில் கங்கை, டேராடூனில் சோங்க் மற்றும் சுஷ்மா உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அபாய அளவை எட்டியுள்ளது.
இதனிடையே, பலத்த மழை தொடர வாய்ப்புள்ளதால், உத்தரகாண்டில் டேராடூன், நைனிட்டால் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.