உயர் நீதிமன்றம் - சேலம் கோவில் யானை

Home

shadow


உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் சேலம் சுகவனேஷ்வரர் கோவில் யானையைக் கருணைக் கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் சுகவனேஷ்வரர் கோயில் யானையான ராஜேஸ்வரி, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்தது. காயம் காரணமாக நிற்கவும், நடக்கவும் சிரமப்பட்டு வந்த யானைக்கு அண்மைக் காலமாக உண்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயிருக்குப் போராடி வரும் நிலையைக் கருத்தில் கொண்டு, யானை ராஜேஸ்வரியைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், யானையைக் கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்தது. மேலும் யானையைப் பரிசோதித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதன் பிறகு விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :