உலக பொருளாதார வளத்தில் இந்தியா உலகில் 6 வது பெரிய நாடாக உயர்ந்துள்ளது - உலகவங்கி

Home

shadow

பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளத்தில் உலகின் 6வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான பொருளாதார புள்ளிவிவர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 லட்சத்து 59 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருப்பதாகவும், கடந்த 7 காலாண்டுகளாக சரிந்து வந்த இந்தியாவின் பொருளாதார நிலைமை, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் ஜிடிபி இரு மடங்காகி இருப்பதாகவும், ஆசிய நாடுகளில் சீனாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி முனையத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7 புள்ளி நான்கு  சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வரும் 2019ஆம் ஆண்டில் இது 7 புள்ளி எட்டு சதவீதமாக உயரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம், பிரிட்டன் மற்றும் பிரான்சை முந்தி உள்ளதாகவும், இதனால் 2032இல் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 3வது இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள்  இடம்பெற்றுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :